சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை நிகழ்வுகளை உள்ளடக்கிய நுால். இளம்பருவத்து எழுச்சி, வீரம், போர்க்குணம், கண்ணியம், விடாமுயற்சி எனப் பல தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிவாஜியின் தீரச்செயல்கள், துணிச்சலான முடிவுகள், கோட்டைகள் பற்றிய விவரிப்புகள், திருமணங்கள், சன்னியாசம், பட்டாபிஷேகம், ஆன்மிகப்பற்று, இறுதிக்காலம் எனப் பலவும் இடம்பெற்றுள்ளன.
சிவாஜியின் திட்டங்களுக்கும், வெற்றிகளுக்கும் அன்னை ஜீஜாபாய் தந்த ஊக்கங்களை உணர முடிகிறது. தமிழகத்தில் சிவாஜி ஆக்கிரமித்ததில் செஞ்சிக்கோட்டையும் ஒன்று. தஞ்சாவூரைக் கைப்பற்றி மராட்டிய மன்னர்கள் ஆண்டது பற்றிய குறிப்புகளும் உள்ளன. சிவாஜியின் மரணம் பற்றிய மாறுபட்ட கருத்தை தரும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு