சுதந்திரப் போராட்டத் தியாகியின் வாழ்க்கையை கூறும் நுால். நாடகங்களால் எழுச்சியூட்டி சுதந்திர தீயை மூட்டியதை குறிப்பிடுகிறது. அதை நடித்து செயல்படுத்தியது பற்றிய தகவல்கள் உள்ளன.
தியாகி விஸ்வநாத தாஸ் குடும்பச் செய்திகள் விரிவாகத் தரப்பட்டுள்ளன. வலிய செயல்கள் செய்து உயர்ந்ததை எடுத்துக்காட்டுகிறது. நாடகத்தை நடத்த விடாமல் ஆங்கிலேயர் தடுத்த முறை பற்றி விரிவான செய்திகள் உள்ளன. காந்திஜியை சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியாக விவரிக்கப்பட்டுள்ளது. அந்தக் கால சாதி கொடுமைகளும் விவரிக்கப்பட்டுள்ளன.
தேச விடுதலைக்காக, 29 முறை கைது செய்யப்பட்டு சிறை வாழ்க்கை அனுபவித்ததை கூறுகிறது. தியாக சீலரின் வாழ்க்கை வரலாறு நுால்.
– டாக்டர் கார்முகிலோன்