பெண்ணியக் கருத்துகளை பெண் பார்வையில் முன்வைக்கும் நுால்.
ஆணவப் படுகொலை தோற்றம், உடையும் பாலின பேதம், வரதட்சணையும் பெண் வெறுப்பும், பேயும் பெண்ணும் போன்ற தலைப்புகளில் கவனத்தை ஈர்க்கிறது. சமகால சமூக சங்கதிகளை விமர்சித்து சங்க இலக்கியங்களிலிருந்து சான்று எடுத்துக் காட்டியிருப்பது பார்வையின் கனத்தை உணரச் செய்கிறது.
பெண்ணின் அடையாளமும், முகமும், முகவரியும் எப்படி இருக்க வேண்டும் என எவ்வித ஒப்பனையும் இன்றி சொல்லியிருப்பது தனித்த அழகுடன் இருக்கிறது. பெண்களைப் பற்றி பெண்கள் நினைப்பதை அறியத்தரும் நுால்.
– ஊஞ்சல் பிரபு