பொழுதுபோக்கும் கலையாக இருந்த சினிமாவை, நாட்டின் போக்கை மாற்றியமைக்கும் சக்தியாக மாற்றிய எம்.ஜி.ஆரின் சிந்தனைகளை தொகுத்துள்ள நுால்.
நாடகத்தில் துவங்கி சினிமாவில் நுழைந்தவர். சினிமாவில் முன்னேறியதும், தி.மு.க.,வில் இணைந்து அரசியலில் புகுந்தார். நற்பண்புகளை படங்களில் புகுத்தியது கண்டு வியக்கலாம். விபத்துகளுக்கு நிதி, படத்தை தயாரித்து இயக்கிய அனுபவம் என தகவல்கள் உள்ளன. மக்களை மேம்படுத்துவதே சினிமா போன்ற தலைப்புகளில் எம்.ஜி.ஆர்., எழுதியதும் தரப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர்., வாழ்க்கை வரலாற்று நுால்கள் பல வந்துள்ளன. இதில் அவரது பேச்சு, பேட்டி, எழுத்துமாக வந்துள்ளது தனிச்சிறப்பு. அவரே முன்னால் நின்று பேசுவது போல் உள்ள நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்