மியான்மர் நாட்டின் வரலாற்றைக் கூறும் நுால். நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த ஆங் சான் சூச்சி ஏற்படுத்திய மாற்றம் குறித்து சொல்கிறது.
போராட்டங்களை வலிகளுடன் விவரிக்கிறது. விடுதலை பெற்றது முதல் ஆட்சி அமைப்பில் ஏற்பட்ட படிநிலைகளை விவரிக்கிறது. பாமர் இனம், தங்கள் தேசத்திற்காக ஏற்படுத்திய போராட்டங்களை கூறுகிறது. தேசிய மதமாக புத்தம் உருவானதை பகிர்கிறது.
பிரிட்டிஷ் அரசு, கூர்க்கர் படையை உருவாக்கிய சூட்சமத்தை கூறுகிறது. மகாத்மா காந்தி, மியான்மரில் காலடி வைத்தபின் ஏற்பட்ட மாற்றங்களை பகிர்கிறது. ராணுவ ஆட்சியால் ஏற்பட்ட துயரம், இழப்புகளை விவரிக்கிறது. ஜனநாயகத்தில் இடர்ப்பாடுகளை எடுத்துரைக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்