சனாதனம் வெறும் சடங்கு முறையல்ல. அதுவே, வாழ்வுக்கான வழிமுறை என்பதை விளக்கும் நுால்.
இது, வழிபாட்டை மட்டும் சொல்லவில்லை. சனாதன தருமத்தின் உயிர் மூச்சே சத்தியம் தான். நம் அரசு சின்னத்தில் இருக்கும் வாக்கியம், ‘சத்யமேவ ஜயதே’ என்பதாகும். அதாவது வாய்மையே வெல்லும்.
அனைவரையும் கடவுளாகப் பார்ப்பது என்பது அதன் அடிநாதம். அது சமயத்தையும், மக்கள் சேவையையும் பிரித்து பார்த்ததே கிடையாது என்பதை தெளிவுபடுத்துகிறது. சனாதனம் என்றால் என்ன என்பதை மிக தெளிவாக எளிய நடையில் விரிவாக விளக்கி, கருத்துக்கள் கூறப்பட்டு உள்ளன. ஹிந்துக்கள் மட்டுமல்லாது அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய புத்தகம்.
– இளங்கோவன்