பண்டைய வரலாற்று செய்திகளை தொகுத்துள்ள நுால்.
கி.மு., 10,000 ஆண்டு பின்னோக்கு காலத்திலிருந்து, கி.பி., 1857 வரை இந்திய வரலாற்று நகர்வுகளை படம் பிடிக்கிறது. பழைய கற்காலம் முதல், பெருங்கற்காலம் வரை பண்பாட்டு வளர்ச்சியை தெரிய வைக்கிறது.
பல நாகரிகச் சூழல்கள் நிலவியல் விளக்கங்களோடு தந்து வாழ்க்கை முறைகளை முன்வைக்கிறது. சிந்துவெளி காலத்தில் உணவு, உடை, தொழில்கள், பண்பாட்டுச் சூழல்களை முன்வைக்கிறது.
புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள், கல்வெட்டு, தொல்பொருட்கள் பற்றிய தகவல்களை தருகிறது. வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு