பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கீழாநிலைக்கோட்டை மற்றும் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து புனையப்பட்டுள்ள நாவல்.
நகரத்தார், வல்லம்பர் சமுதாய நட்பையும், இணக்கத்தையும் விவரிக்கிறது.
பாம்பாற்று நாட்டைச் சேர்ந்த வல்லம்பர் தலைவரின் மகள் வள்ளிமயில், சாத்தப்பச் செட்டியாரின் மூத்த மகள் கண்ணம்மா, சிற்பியின் மகள் சுபத்ரா, கோவில் அர்ச்சகரின் மகள் திரிபுரசுந்தரி என்ற இளம் பெண்களே நாயகியர்.
இவர்கள் இசை, நடனம், வாள் போர் கலைகளில் சிறந்து, இளவரசர்களின் உயிரை காப்பாற்றும் அளவுக்கு வீரமும், துணிவும், மதிநுட்பமும் நிறைந்தவர்களாக செயல்படுவதை விவரிக்கிறது. தமிழர் வீரம், கலைநயம், பண்பாட்டை பறைசாற்றும் வரலாற்று நாவல்.
– புலவர் சு.மதியழகன்