உயிரை சிவத்திடம் ஒப்படைக்கும் உணர்வு நிலையை சிந்தனைத் துளிகளாக எடுத்துரைக்கும் நுால்.
‘அற்றது பற்றெனில் உற்றது வீடு’ என்ற தத்துவச் சிந்தனையையும், ஓசை தரும் அதிர்வுகளையும் மட்டும் எடுத்துரைக்காமல் ஆன்மக் கடலாக விரித்துரைக்கிறது. ஆலம் விதைக்குள் பெரிய மரம் ஒளிந்து கிடப்பதை போல ஆன்மிகத் தத்துவம் பொதியப்பட்டுள்ளது.
திருக்கயிலாயத்தைப் பார்த்து பரவசம் அடைந்த அனுபவத்துடன் இறையனுபவத்தை வழங்குகிறது. வாழ்க்கை, அதில் வெளிப்பட்ட தெய்வீக இன்பத்தை உள்ளபடி தருகிறது. இறையனுபவத்தை தேடிக் கண்டறிய முயல்வோரும், இறையனுபவத்தை தேடி எங்கும் போக இயலாதோரும் படிக்கலாம். அந்த அனுபவத்தை நேரில் கண்டதை போல் உணரலாம்.
– முகிலை ராசபாண்டியன்