புத்தக வாசிப்பு என்பதே இல்லாத இந்த தலைமுறை கண்டு, பெற்றோர் வருத்தமடைகின்றனர். மொபைல் போன்களில் மூழ்கிக் கிடக்கும் அவர்களை மீட்க, புத்தக வாசிப்பே சரியான வழிமுறை.
அது அவ்வளவு சாத்தியமில்லையே என சால்ஜாப்பு சொல்கின்றனர். இந்த புத்தகத்தை வாங்கி, கதையை குழந்தைகளிடம் படித்து காட்டுங்கள்; அடுத்து என்ன என ஆச்சரியத்துடன் கவனிப்பர்; கதையின் போக்கை கண்டு குதுாகலிப்பர்.
குழந்தைகள் புத்தகம் வாசிக்க வேண்டுமானால், முதல் அடியை பெற்றோர்தான் எடுத்து வைக்க வேண்டும். இக்கதையின் நாயகர்களான விகுலன், நகுலன் சந்திக்கும் எதிர்பாராத பிரச்னைகள் குறித்து வாசிக்கையில் மகிழ்ச்சி அடைவர். கற்பனை வளத்தை அதிகப்படுத்தும் நுால்.
– சி.கலாதம்பி