மன்னன் பெருங்கடுங்கோ ஆட்சித் திறம், வீரம், வள்ளல் தன்மையை விவரிக்கும் நுால். கொடை குணம் பற்றி தெள்ளு தமிழில் சொல்கிறது.
இயற்கையாக மழை பொழிவதைக் கூட, களிப்புடன் கன்னல் சுவையில் எடுத்தியம்புகிறது. வாழ்வில் எதிர்பார்ப்பே இல்லையெனில் எதுவும் கசக்கும் என கருத்துரைக்கிறது; ஏமாந்து விடாமல் எச்சரிக்கையாய் இருக்க வேண்டுமென எடுத்துரைக்கிறது. கவித்துவ அழகு, மனம் களிக்க வைக்கிறது.
புத்தகம் முழுக்க, ‘சிலந்தி வலை சிங்கத்தை சிறை தான் கொளுமோ...’ என்பது போல் சிலிர்த்தெழ வைக்கும் பாணியில் எழுதப்பட்டுள்ளது. மன்னனின் பேரரசையும், அவன் பாடிய காவியத்தையும் கண்முன் காட்டும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்