தமிழ், கன்னட மொழி நாடகங்களை ஒப்பிட்டு விளக்கும் நுால். ஒற்றுமை, வேற்றுமைகளை ஆய்வு செய்து தகவல்களை தருகிறது.
பெண்ணியம், தொன்மவியல், சமூகவியல், உளப்பகுப்பாய்வு போன்ற தலைப்புகளில் ஒப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
சமூக மாற்றங்களையும் சுட்டிக் காட்டுகிறது. காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை நாடகங்கள் உள்வாங்கி திகழ்வதாக குறிப்பிடுகிறது.
தமிழில் இந்திரா பார்த்தசாரதியின் நவீன நாடகங்கள், கன்னடத்தில் கிரிஷ் கர்னாட் நாடகங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்து விவரிக்கிறது. ஜாதி நிலை, பெண்ணடிமைத்தனம், சமூகப்போலிகளை சுட்டிக்காட்டுகிறது.
நாடகம் எழுதுவோருக்கும், ஒப்பீட்டு முறையில் ஆராய்ச்சி செய்வோருக்கும் உதவும். நாடகத்தைப் பற்றி அறிந்து கொள்ள வழிகாட்டும் நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்