மாங்காடு காமாட்சி அம்மன் அருளை வெளிப்படுத்தும் அமானுஷ்ய சம்பவங்கள் உடைய நாவல் நுால்.
கோவில் சிவாச்சாரியார் சொன்ன உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்டுள்ளது. பக்தியும், நம்பிக்கையும் கொண்டவர், எந்த ஆபத்தில் இருந்தும் தப்பித்து விடுவர் என்பது உணர்த்தப்பட்டுள்ளது.
மாங்காடு காமாட்சி ஊசி முனையில் ஒற்றைக் காலில் தீயின் நடுவே தவம் செய்வதை கண்ட ஜெயா, தன் வாழ்வும் இப்படியே ஆபத்தின் நடுவில் இருப்பதை உணர்ந்து மீள முயல்கிறாள். விரதம் இருந்து எலுமிச்சம் பழம் கொடுத்து வழிபட்டு குறை தீர்ந்து நேர்த்திக்கடன் செலுத்தியதை அனுபவமாக தந்து வழிகாட்டுவதை கதையாக கூறுகிறது. மாங்காடு தல புராணமும், மங்கை ஜெயாவின் சுய புராணமும் கலந்த அற்புத அமானுஷ்ய நாவல்.
– முனைவர் மா.கி.ரமணன்