துரோகம், கொலை, ஆடம்பரம், விளம்பரம் இவையே அடிப்படை தகுதியாக உடைய அரசியல்வாதி வேடத்தை தோலுரிக்கும் குறுநாவல்.
கட்டட வேலை செய்யும் புண்ணியமூர்த்தி, உழைப்பால் மேஸ்திரியின் அன்பை பெறுகிறான். பின்னர் துரோகம், வஞ்சகத்தால் ரியல் எஸ்டேட் உரிமையாளருடன் நெருக்கமாகிறான். அவரது மகளை மணக்கிறான். பணத்தைப் பாதுகாக்கவும், மேலும் சேர்க்கவும் அரசியலில் நுழைகிறான்.
போட்டித் தேர்வில் வென்று கண்ணியமிக்க காவல் துறை அதிகாரியாகிறாள் அவன் மனைவி. ஆனால், புண்ணியமூர்த்தியோ கள்ளக்காதல், அதை மறைக்க கொலை, நில அபகரிப்பு என அத்துமீறுகிறான். அவனை மன்னித்து விட்டாளா மனைவி என்பதை திருப்பமாக உடைய கதை நுால்.
– புலவர் சு.மதியழகன்