விண்வெளியில் விந்தைகள், வியக்க வைக்கும் செயல்பாடுகள் பற்றிய அரிய செய்தி தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.
விண்ணில் அடையாளம் காணவியலாத பொருட்களை பற்றி விரிவாக முன்வைக்கிறது. பல்வேறு புதிர்களை விவாதித்து அறிவியல் ரீதியாக விளக்கம் தருகிறது.
வேற்றுக்கிரக வானுார்திகள் பற்றி கூறுகிறது. உலகில் அறிவாற்றல் மிக்க மனிதர்கள் போல் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழும் சாத்தியக்கூறுகளை எடுத்துரைக்கிறது.
இறக்கை இன்றி மின்னல் வேகத்தில் பறக்கும், ‘டிக்டாக்’ என்ற பொருள் பற்றிய செய்தி வியப்பானது. ஏலியன் பொருட்களை ஆராய்ச்சி செய்யும் அறிவியல் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை பதிவு செய்கிறது. பால்வீதி பற்றிய ஊகங்களை முன்வைத்து ஆர்வமூட்டும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு