பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ராமதாசின் தன் வரலாறு கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியது குறித்த விபரங்கள் பதிவாகியுள்ளன. தென்மாவட்டங்களில் ஏற்பட்ட கலவரங்களின் போது அமைதியை நிலைநாட்ட எடுத்த முயற்சி துவங்கி, மரங்கள் நடும் பணி வரை, 54 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
சமூக நீதிக்காக நடத்திய போராட்டங்கள், இட ஒதுக்கீடு செயல்பாடுகள், பிற சமூக மக்களின் நன்மைக்கான செயல்பாடுகளை மையப்படுத்திய கருத்துகளை புத்தகம் முழுதும் காண முடிகிறது. மாநில மற்றும் தேசிய அளவில் அரசியல் கட்சிகளுடன் இணைக்கமாக செயல்பட்டு சாதித்தது குறித்தும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவர் ராமதாசின் தன் வரலாற்று நுால்.
– ஒளி