கோவன் பதிப்பகம். 72,எம்.ஜி.ஆர். சாலை, நங்கை நல்லூர், சென்னை-61.
ஆண்டாளின் வாழ்விலும், மீராவின் வாழ்விலும் நிகழ்ந்தவை நாடக உருவாக்கம் பெற்றிருக்கிறது. முப்பது நூல்கள் படைத்த ஆசிரியர் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பரிசுகளைப் பெற்றவர். அதனால் தான் நாடக வசனங்களில் தமிழும் உயிரோட்டமும் கலந்து நிற்கிறது.
ஆண்டாள் பெயர் ஏன் என்பதற்கு அசரீரியாக இறைவன் கூறும் கருத்தை பக்.27ல் பார்க்கலாம். எளிய தமிழ்நடை. ஆனால் அழுத்தமான கருத்துக்கள்.
அதே போல மீரா கூடைக்குள் இருந்த பாம்பை மாலையாக கண்ணனுக்கு அணிவிக்கும் காட்சியை பக் . 94ல் பார்த்து மகிழலாம். நல்ல தொரு நாடக நூல்.