கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-600 017. (பக்கம்: 252.)
நாடகக் கலை மெல்ல மறைந்து வருவது ஓர் உண்மை. ஐந்து நாடகங்கள் அடங்கிய நூல் இது.
உபநிடத காலத்தில் வாழ்ந்த அஷ்டாவக்கிரரின் வரலாற்றைப் புதுமைக் கருத்துக்களுடன் விவரிக்கும் "ஞானயுத்தம்' புத்தரின் துறவு, நிர்வாணம் பற்றி மாறுபட்ட கண்ணோட்டத்துடன் விளங்கும் "புத்தரின் கருணை'
ஸ்ரீகிருஷ்ண தேவராயரின் சரித்திரம் பேசும் நாடகம், கல்கியின் சிவகாமியின் சபதம் நாவலில் இருந்து தெறித்து விழுந்த ஒரு துளியான இலங்கை இளவரன் மானவர்மனின் வரலாற்றை விவரிக் கும் நாடகம், "நட்பு மனம்' அருட் செம்மல் தாயுமானவர் ஆகிய ஐந்து நாடகங்களும் ஒவ்வொரு தனிச்சிறப்புடன் விளங்குகின்றன. சரித்திர நவீனங்கள் எழுதி அனுபவம் முதிர்ந்த கவுதம நீலாம்பரன் இந்த நாடகங்களிலும் தனி முத்திரை பதித்துள்ளார்.