கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
கிளர்ச்சியாளன், போராளி என்பவன் ஒரு படைப்பாளி, ஆக்கம் என்பதுதான் அவனுடைய முழுத் தத்துவம். அழிவுப் பாதையிலேயே நீண்ட நெடுங்காலம் வாழந்திருக்கிறோம். இதனால் சாதித்தது என்ன? எனவே தான் கிளர்ச்சியாளனுககும், பதில் செயலில் இறங்குபவனுக்கும் இடையே ஒரு தெள்ளத் தெளிவான வரைமுறையை ஆசிரியர் வகுத்திருக்கிறார். கிளர்ச்சியாளனுக்கும், புரட்சியாளனுக்கும் இடையே இதே போலவே ஒரு வரையறையை வகுத்திருக்கிறார். கிளர்ச்சியாளராக இருப்பதற்கு அஹிம்சை அடிப்படைத் தேவை. வன்முறையில் நம்பிக்கையில்லாதவனாக அவன் இருந்தாலொழிய, அமைதியான, போரில்லாத, வர்க்க பேதமற்ற ஒரு சாதனமாக அவனால் செயல்பட முடியாது. நீ வன்முறை விதைகளை விதைத்துவிட்டால், வன்முறைக் கறைபடியாத பூக்கள் பூக்குமென்று எதிர்பார்க்க முடியாது. நீ விதைத்த விதைகளிலிருந்துதானே அந்தப் பூக்கள் மலரப் போகின்றன? ஒவ்வொரு வன்முறைப் புரட்சியும் இன்னொரு வன்முறைச் சமுதாயத்தை, இன்னொரு வன்முறைக் கலாச்சாரத்தைத்தான் உருவாக்கியிருக்கிறது. கிளர்ந்தெழும் எழுச்சி இதுவரை பெரிய அளவில் முயற்சிக்கப்படவே இல்லை. லட்சோப லட்சம் தியானிப்பவர்களின் முயற்சியாலும், நேசத்தாலும், மவுனத்தாலும், அமைதியாலும் எல்லாவிதமான வன்முறைக்கும் காரணமான வேறுபாடுகளைக் களைவோம். இடைவெளியைப் போக்கி, தொடர்பற்ற நிலையை அகற்றி, இடத்தை நிரப்பி, இந்தப் பூமியின் மனிதனையும் வாழ்க்கையையும் பாதுகாப்போம்.