எல்.கே.எம்., பப்ளிகேஷன், 15/4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 493.
முருகப் பெருமானையும், திருஞானசம்பந்தரையும் ஒன்றாகவே சைவப் பெரியோர்கள் கருதுவர். சைவப் பயிர் வளர்த்த சான்றோர்களில் திருஞான சம்பந்தர் முக்கியமானவர். அவர் தம் தேவாரப் பதிகங்களில் இறைவனைப் பாடியதுடன், அங்குள்ள மக்களையும், இயற்கைக் காட்சிகளையும், இயற்கைப் பொருள்களையும் சேர்த்துப் பாடியுள்ளார். சம்பந்தர் அருளிய பதிகங்கள் 384; அவர் சென்று வழிபட்டுப் பாடியருளிய தலங்கள் 220 என்பர்.இந்நூலாசிரியர் சம்பந்தர் பாடியருளிய சோழ நாட்டுத் தலங்கள், ஈழ நாட்டுத் தலங்கள், பாண்டிய நாட்டுத் தலங்கள், கொங்கு நாட்டுத் தலங்கள், தொண்டை நாட்டுத் தலங்கள் என்று பலவாறு பிரித்து மொத்தம் 232 தலங்கள் குறித்து இந்நூலில் விவரித்துள்ளார்.
ஒவ்வொரு தலத்தில் இருப்பிடமும், அத்தலத்தின் பெருமையும், சம்பந்தர் பாடலின் நயமும் நூலாசிரியரால் நன்கு விளக்கப்பட்டுள்ளன. தென்திருமுல்லைவாயில் எனும் தலத்தைப் பாடும் ஞானசம்பந்தர்,"மஞ்சு ஆரும் மாடமனைதோறும் ஐயம்உளதென்று வைகிவரினும்செஞ் சாலி நெல்லின் வளர்சோறு அளிக்கொள்திருமுல்லை வாயில் இதுவே!"என்று கூறியுள்ளதை விளக்கும் நூலாசிரியர், அங்குள்ள மக்கள் யாசிப்போர்க்கு சாலி நெல் அரிசிச் சோற்றை வயிறார அளித்ததைக் கூறுவதுடன், அந்த ஈகைப் பண்பு தான் பெருஞ்செல்வம் என்று கூறி நம்மைச் சிந்திக்க வைக்கிறார் (பக்.43).ஞானசம்பந்தரின் காலமான ஏழாம் நூற்றாண்டின் காலச்சூழ்நிலையை இந்நூலில் நன்கு அறியலாம்