எல். கே.எம்., பப்ளிகேஷன், ப.எண்.15/4, பு.எண்.33/4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 80).
சித்தாந்த சைவம் என்ற இந்து சமய சைவ நெறியை விளக்கிக் கூறும் சித்தாந்த சாத்திரங்களே சிவாகமங்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன.தமிழகச் சிவாலயங்களில் இறைவன் அருளிய சிவாகமங்கள் விதித்துள்ள முறைப்படி மட்டுமே அர்ச்சனைகள் மட்டுமின்றி அனைத்துப் பணிகளும் நடைபெற வேண்டும். இந்தக் கருத்துக்கு ஆதாரமாக நால்வர் அருளிய தேவாரம், திருவாசகம் (முதல் எட்டுத் திருமுறைகள்) திருமூலர், சேக்கிழார் (12ம் திருமுறை) இரேவண சித்தரின் சிவஞான தீபம் போன்ற பல நூல்களிலிருந்தும் ஆதாரம் காட்டுகிறார் ஆசிரியர்.