கடலங்குடி பப்ளிகேஷன், சென்னை - 17. (விலை : 170.00)
ஷ்ரீ வராஹமிஹிராசாரியரின் புகழ் பெற்ற அரிய பெரிய நூல் வெளியீடுகளில் இதுவும் ஒன்று. இந்நூலில் மக்களை கதிகலங்கச் செய்த கடலின் சீற்றம் - பூகம்பங்கள் - தூசுப்புயல் - எரி நக்ஷத்திரங்கள் - இடி - மின்னல் - சகுனங்கள் - போன்ற இயற்கையின் பாதிப்புகளையும் கிரஹங்களின் சாரம் - கிரஹங்கள் முதலியவை அறிவிக்கும் பேய்மழை, கட்டுக்கடங்காத வெள்ளம், நீர்ப்பஞ்சம், வறட்சி, நீங்காத நோய்கள், உலக நாடுகளின் தலைவர்களுக்கு உண்டாகும் கஷ்டம் போன்ற அபூர்வமான பல விஷயங்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இது இயற்கையையும், வான சாஸ்திரத்தையும் ஒருங்கிணைத்து எடுத்துரைக்கும் அரிய நூல்.வான சாஸ்திர நிபுணரான ஷ்ரீ வராஹமிஹிராசாரியார் தனது " பிருஹத் ஜாதகத்தில் " கிரஹங்களைப் பற்றியும் அவற்றின் பாதிப்புகளைப் பற்றின பலாபன்களையும் விரிவாக கூறியுள்ளார்.ஆனால் இந்த நூலில் அவர் பிருஹத்ஜாதகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட இயற்கையின் சீற்றத்தையும் வான சாஸ்திரத்தையும் அடிப்படையாகக் கொண்டு பலரும் படித்துப் பயனடைய எழுதியுள்ளார்.தெளிவான தமிழ்மொழிப் பெயர்ப்பில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.பலரும் படித்துப் பயனடைய வேண்டி இந்நூல் எளிய நடையில் இரண்டு பாகங்களாக (ஷ்ரீமதி) கே.என. சரஸ்வதி எழுதி வெளியிட்டிருப்பது பாரட்டுக்குரியது.