ஆசிரியர்: அலேன் தனியேலு. தமிழில்: முனைவர் எஸ்.ஏ.கே.துர்க்கா. வெளியீடு: கைலாஷ், புதுச்சேரி. (பக்கம்: ௰௨)
* பாரம்பரிய சாஸ்திரிய இசை வடிவங்களில் சிறப்பு வாய்ந்த ஒரு ரத்தினமாக இருக்கும் கர்நாடக இசையையும் உள்ளடக்கி அலேன் தனியேலு எழுதியுள்ள இந்த முக்கியமான கட்டுரைத் தொகுப்பு, திராவிட மொழியான தமிழில் வெளிவரும் இந்த மொழியாக்கமும், பலதரப்பட்ட இசை மொழிகளைப் பாதுகாத்து, ஊக்குவித்து, எல்லோரும் அவற்றை ரசிப்பதற்கான பணியை மேற்கொண்ட இந்தப் பிரெஞ்சுகாரருக்கு செய்யப்படும் அஞ்சலியாகும்' எனப் புகழாரம் சூட்டியவர் ழான் லூயிகபென் என்ற பிரெஞ்சு மொழிக் கலை இலக்கிய ஆய்வாளர்.
அலேன் தனியேலு 1907ல் பாரிஸ் நகரில் பிறந்த பிரெஞ்சுக்காரர். உயர் குடியில் பிறந்த உத்தமர். சிறு வயதிலேயே இசை, சாஸ்திரிய நடனம், வாய்ப்பாட்டு, பியோனா போன்ற இசைக் கருவிகளில் வாசிப்பது போன்ற இசையைச் சார்ந்த பன்முகப் பார்வையில் வெற்றி பெற்றவர். இவர் முதன்மைத் தகுதி பெற்ற இசைக் கலைஞர். பன்மொழி வித்தகர். பூமிப் பந்தையே வலம் வந்தவர். இசைத் துறையில் பல விருதுகளை வாங்கிக் குவித்தவர். இருபதாண்டுகள் வாரணாசியில் தங்கிப் புராதனமான பாரத கலாசாரத்தின் மாண்பை அறிந்து கொணடார். இந்திய, கர்நாடக சங்கீதத்தைக் கற்று தேர்ச்சி பெற்றார். இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்று எழுதவும், பேசவும் வல்லவராவார். ரவீந்திரநாத் தாகூர், விஜயானந்தர், பிரும்மானந்தா, சிவேந்திரநாத் பாசு போன்றோர்களுடன் நெருக்கமாயிருந்து நுண்கலைகளில் பற்பல ஆய்வுகள் செய்தவர். சைவ சமயத்தின் மேல் ஆழப்பற்று கொண்டு கர்பாத்திரி சுவாமிகளிடம் சிவதீட்சை பெற்று தனது பெயரை சிவசரண் என்னும் நாமத்தைப் பெற்றுக் கொண்டவர். வாரணாசி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், இந்திய இசைக் கல்லூரியில் முதல்வராகவும் இருந்து இந்திய நாட்டு புராதன இசைக்கலைக்கு அருந் தொண்டாற்றிய தவசீலர்.
இந்நூல் 1961 முதல் 1981 முடிய சர்வதேச மாநாடுகளில் இவரால் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு, இசை ஓர் உலக மொழியா? கிழக்கிந்திய நாடுகளின் கண்ணோட்டத்தில் இசையின் உலகளாவிய தன்மையும் தேசியத் தன்மையும் கீழ்த்திசை நாடுகளில் இசை இயலில் காணப்பெறும் உருவங்கள். இசையின் உட்பொருள் வடிவம், பல்வேறு இசை கலாசாரங்களின் மரபும், புதிய கண்டுபிடிப்பும், ராக இசையும் ஹார்மோனிய இசையும், இந்திய இசையின் எதிர்காலம் என எட்டுத் தலைப்புகளில் ஓர் ஆய்வு நூலாக உள்ளது இந்நூல். இந்திய சாஸ்திரி கர்நாடக இசையின் மேல் இவர் வைத்துள்ள பக்தி, நேசம், ஆழம் இவரது ஆய்வுக் கட்டுரைகளில் ஜொலிக்கின்றன. ஒரு அயல்நாட்டவர் நம் நாட்டின் பண்பாட்டுக் கலாசார நுண்கலைகளை உயிருக்குயிராய் நேசிக்கின்ற இவரது பாங்கு நம்மை வியக்க வைக்கிறது. இவரது ஆய்வுக் கட்டுரைகளில் ரவிசங்கர், அலி அக்பர்கான், டி.கே.பட்டம்மாள், பாலசரஸ்வதி, கே.எஸ்.பிச்சையப்பா (நாதஸ்வரம்) ஜெயம்மாள், விஸ்வநாதன், நாராயண அய்யர் (கோட்டு வாத்தியம்), திருமதி வித்யா சங்கர் (வீணை) போன்றோர்களது இசை நுணுக்கத்தினையும் திறமைகளையும் ஆழமாய் நுண்மான் நுழைபுலனாய்வோடு பதிவு செய்திருப்பது இசைத் துறை ஆய்வாளர்களுக்கு ஒரு மூலபாடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்திய இசையில் மோட் அல்லது சிராகம் என்பது ஒலி இடைவெளிகளைக் கொண்ட அமைப்புகளை மட்டுமல்லாமல் மனநிலையின் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதாகும். இந்தக் காரணத்தினால் தான் இசை ராகம் என அழைக்கப்படுகின்றன. ராகம் என்னும் சொல்லுக்கு மனநிலை என்பதாகும் (state of Mind பக்கம் : 27).
தவறான முறைகளை கைவி