முகப்பு » வரலாறு » மதராஸ் என்கிற சென்னை சோழ மண்டலத்தின் ராணி

மதராஸ் என்கிற சென்னை சோழ மண்டலத்தின் ராணி

விலைரூ.180

ஆசிரியர் : வெ.ராஜகோபால்

வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை

பக்கம்: 127  

1300 ஆண்டுகளுக்கு முன், கிரேக்க ரோம் நாட்டினர், இந்தியாவின் தென்பகுதி சோழ மண்டலக் கடற்கரையில் வந்து இறங்கினர். 400 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவின் நாலாவது பெரிய நகரமாக தெற்கு வாயிலாக "மதராஸ் உருவானது என்று துவங்கி, நம் சென்னை வரலாற்றின் மலரும் நினைவுகள், இந்த நூலில் மணம் வீசுகிறது. புத்தகச் சாப்பாட்டில் பக்கத்தில் உள்ள கூட்டு, பொரியல் போல படங்கள். இந்த நூலில் கொஞ்சம் சோறு,மிஞ்சும் அளவில் பக்கத்தில் பதார்த்தங்கள் வெகு ஜோராகப் பரிமாறப்பட்டுள்ளன.

          போர்த்துக்கீசியர், 400 ஆண்டுகளுக்கு முன், மெலியாபூர்  (மயிலாப்பூர்) துறைமுகம் காண வந்தனர். விக்டோரியாவின் பிரிட்டன் ஆங்கிலேயரும், ஸ்காட்லாந்துக்காரரும், அவர் குடும்பத்தாரும், வணிகம் செய்ய வந்து காலூன்றினர். 200 ஆண்டுகளுக்கு முன், மதராஸ் மொத்த வியாபாரத்தலமாக ஆனது. இரண்டாம் உலகப் போருக்கு பின் மதராஸ், பரபரப்பான மக்கள் தொகை மிக்க தொழில் நகரானது.

தற்கால அரசியல்வரை விளக்கும் இந்நூலில் சில தகவல்கள்: 1640ல் பண்டக சாலையாக ஐõர்ஜ் கோட்டை எழுந்தது. 1857ல் சென்னைப் பல்கலைக் கட்டடம் உருவானது. 1841ல் உயர் கல்விக் கூடமாக உருவானது பிரசிடென்சி கல்லூரி. இதில் நோபல் பரிசு பெற்ற மாமனும், மருமகனுமான சர்.சி.வி.ராமனும், எஸ்.சந்திரசேகரும், ராஜாஜியும் படித்து உயர்ந்தனர். பல்லவர் காலத்தில், அடையாறு சிறந்த துறைமுகமாக இருந்தது. இது போல், பல அற்புத தகவல்கள் பல உள்ளன.


 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us