காஞ்சி பெரியவரின் உபதேச அமுத மொழிகளை தொகுத்து தரும் நுால்.
ஆன்மிக ஞானத்தை வழங்கும் காஞ்சி பெரியவரின் பொன்மொழிகள் இந்த புத்தகம் எங்கும் நிறைந்துள்ளன. பெரியவர் கற்றுணர்ந்த மொழிகளின் ஞானம், வேதங்கள், உபநிஷதங்களில் இருந்து ரத்தின சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளது.
உலகிலே மிகப்பெரிய சுகம் மன அமைதியாகும்; அனைவரும் நலமாக வாழ வேண்டும் என நினைத்தால், நீ நலமாக வாழ்வாய் என்பது போன்று வாழ்வில் உயர்வதற்கு ஏற்ற நம்பிக்கை மொழிகள் மனதில் பதியும் வகையில் தரப்பட்டுள்ளன. குருபக்தி, குருகுலவாசம், வேத உச்சரிப்பு விதிகள் பற்றியெல்லாம் சிறப்பான விளக்கங்கள் தந்துள்ளது. காஞ்சி மாமுனிவரின் அமுத மொழிகளின் தொகுப்பு நுால்.
– ராம்