திருமூலரின் திருமந்திரத்தை பகுப்பாய்வு செய்து கருத்துகளை தொகுத்துள்ள நுால். திருமூலரின் தத்துவங்களை ஆராய்ந்து, ஆன்மிக, அறிவியல், யோக சம்பந்தமான விளக்கங்களை பகிர்கிறது.
திருமந்திரத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஆழ்ந்த அர்த்தங்களை விளக்குகிறது. யோக வழிமுறைகள் மற்றும் அதற்கான ஆன்மிக விளக்கங்கள் தெளிவாக தரப்பட்டுள்ளன. திருமந்திரத்தை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய முறையில் அறிமுகம் செய்கிறது.
திருமந்திரத்தின் ஆழ்ந்த பொருளை புரிந்துகொள்ள விரும்புவோருக்கு பயனளிக்கும். ஆன்மிக ஆர்வலர்கள், தமிழ் பாரம்பரியம் மீது காதல் கொண்டுள்ள வாசகர்கள் படிக்க வேண்டிய நுால்.
-– இளங்கோவன்