ஆன்மிகத்தின் உச்சத்தில் ஏற்படும் பரவச உணர்வு பிரமிக்க வைத்து கட்டிப்போடுகிறது. மனிதனுக்கு செய்யும் உதவியும் ஆன்மிகம் தான்.
விஞ்ஞானிகளின் விபரீத அறிவின் முன், பழங்குடியினத்தவர் விவேக அறிவு வென்றதை படிக்கும் போது, ‘உபுண்ட்டு’ என சொல்ல தோன்றுகிறது. அதென்ன ‘உபுண்ட்டு’ என யோசிக்க ஆரம்பித்தால் நேரடியாக புத்தகத்தை வாங்கி படியுங்கள். கதைக்குள் தொலைந்து போவீர்.
இறைவன் கால் செருப்பாக பாவித்த ராமானுஜரின் பணிவை கண்டு வருந்திய மன்னன், ஹவாய் தீவுக்கு மனைவியை அழைத்து செல்ல துடிக்கும் கணவனின் தவறான அணுகுமுறை... என ஒவ்வொரு கதையும் நீதிபோதனை தரும் வகையில் உள்ளன.
– எம்.எம்.ஜெ.,