ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளைப் பற்றிய நுால். தோன்றிய விதம், வழிபாட்டு முறைகள், அடையும் பலன்களை சுவைபடச் சொல்கிறது.
ஹிந்து மத பெருமை, வழிபாடு உணர்வுபூர்வமானது; நம்பிக்கையின் வெளிப்பாடு என்று எடுத்து இயம்புகிறது. அமாவாசையின் முக்கியத்துவம், அதை அனுசரிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கியுள்ளது. சித்திரை மாதத்தை வருடப்பிறப்பாக கொண்டாடுவதற்கு தக்க விளக்கம் தருகிறது.
சோமவாரம், பிரதோஷ விரதம் சிவனுக்கு உகந்த தினமாக உள்ளதை அறியத்தருகிறது. வைகுண்ட ஏகாதசியின் சிறப்பையும், அதை கடைப்பிடிக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் உரைக்கிறது. பண்டிகைகளை பற்றிய நுால்.
– டாக்டர் கார்முகிலோன்