ஊரகப் பகுதியில் பாட்டி ஆதரவில் வசிக்கும் சிறுமியின் மனப்போராட்டங்களை உணர்ச்சி பொங்க விவரித்துள்ள நாவல் நுால்.
நாட்டுப்புற விளையாட்டுகளான பல்லாங்குழி, கூட்டாஞ்சோறு குறும்புகளோடு விளையாடுவதும், நாட்டுப்புற பாடல்களின் பொருள் தெரியாமல், சினிமா பாட்டை பாடும் கள்ளங் கபடமற்ற உள்ளங்களின் வெகுளித்தனத்தையும் விவரிக்கிறது.
பாடலின் இனிமை கேட்டு, இசைத்திறனை கண்டறிந்து போட்டியில் பங்கேற்க வைத்த ஆசிரியர் கதாபாத்திரம் சிறப்பாக படைக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளின் மனநிலையை விவரிக்கிறது. கிராமத்து சொலவடைகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. இறை பக்தி விதைக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் வாசனையைச் சுவாசிக்கவும் பள்ளி வாழ்வை யோசிக்கவும் அறிவுறுத்தும் நுால்.
– புலவர் சு.மதியழகன்