தொன்மவியல், மர்மம், ஆன்மிகம், அறிவியல் கலந்து உருவாக்கப்பட்ட பரபரப்பான நாவல் நுால். திரில்லர் போல் எழுதப்பட்டுள்ளது.
முதல் பாகம் போலவே கவரும் விதமாக இருக்கிறது. கதையின் மையக்கருவாக மறுவாழ்வு பெற்ற ஏழு அரிய உயிரினங்கள் பற்றிய செய்தி உள்ளது. அது ஆழ்ந்து ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. பாரம்பரியம், மாயாஜாலங்கள் நிறைந்துள்ளன. அறிவியல், ஆன்மிகம் மற்றும் மரபியல் கூறுகளின் இணைவாக உள்ளது.
மர்மக்கதைகளை விரும்புவோர், ஆன்மிகம் மற்றும்அறிவியல் கலந்த கதைகளில் ஆர்வமுள்ளோரை ஈர்க்கும். ஆழமான கதைக்கள தேடலுள்ளோருக்கும் பிடிக்கும். எதிர்பாராத திருப்பங்கள் ஆழமான சிந்தனைக்குரிய விஷயங்களால் நிறைந்துள்ள நுால்.
-– இளங்கோவன்