தமிழில் வாக்கியங்கள் அமைப்பதை எளிதாக கற்றுக் கொள்ள உதவும் புதிர்களின் தொகுப்பு நுால். இதில், 100 புதிர்கள் அமைந்துள்ளன. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கட்டத்துக்குள் தமிழ் எழுத்துகள் சில நிரப்பப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து ஒரு வாக்கியத்தை உருவாக்குவதற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளதை வழிகாட்டியாக கொண்டு, சொற்களைக் கோர்த்து வாக்கியங்களை உருவாக்க வேண்டும்.
தமிழ் மொழியில், பல வித வாக்கியங்களை அமைப்பதற்கான பயிற்சியாக உள்ளது. தமிழை தவறின்றி எழுத உதவும் வகையில் அமைந்துள்ளது. எளிமையான அறிவு நுால்.
– ஒளி