முகப்பு » ஆன்மிகம் » சிதம்பர அந்தாதி

சிதம்பர அந்தாதி

விலைரூ.90

ஆசிரியர் : பா.சிவரஞ்சனி

வெளியீடு: சித்ரா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
திருநெல்வேலியில் கிடைத்த சுவடியை செப்பம் செய்து பதிப்பிக்கப்பட்டுள்ள நுால். வட்டார வழக்குச் சொற்களும், வடமொழிச் சொற்களும் கலந்துள்ளன. அருதனக்குட்டி நாடார் இயற்றியுள்ளார். 249 பாடல்கள் உள்ளன. புராணச் செய்திகள் பரவிக் கிடக்கின்றன. சுந்தரரை இறைவன் தடுத்தாண்டு கொண்ட செயல் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசர் வரலாறு, மாணிக்கவாசகர் வரலாறு, சிவன் பிரம்படி பட்ட வரலாறு, முப்புரம் எரித்த வரலாறு போன்றவை கூறப்பட்டுள்ளன. மார்க்கண்டேயன் கதை, சிறுத்தொண்டர் கதையும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. வள்ளியை முருகன் மணந்த நிகழ்ச்சியை, ‘கொச்சை குரவரெடுத்து வளர்த்த குறத்தியைக் கொண்டவன்’ என்று குறித்துள்ளார். ஆய்வாளர்களுக்கு பெரிதும் பயன்படும் நுால்.

பேராசிரியர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us