முகப்பு » இலக்கியம் » தாய்க்கோழி பெரியார் இலக்கியம்

தாய்க்கோழி பெரியார் இலக்கியம்

விலைரூ.230

ஆசிரியர் : இரா.அறவேந்தன்

வெளியீடு: காவ்யா

பகுதி: இலக்கியம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பாவேந்தர் பாரதிதாசன் நடத்திய குயில் இதழில், ஈ.வெ.ரா.,வை தாய்க்கோழி என குறிப்பிட்டுள்ளதை தலைப்பாக்கி எழுதப்பட்டுள்ள நுால். ஈரோட்டுத் தாத்தா, கொய்யாக் காதல் என நாச்சியப்பன் படைத்துள்ளவை தொகுக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பாக பாரதிதாசன் எழுதிய நேரிசை வெண்பாவும் இடம் பெற்றுள்ளது. குயில் இதழில் வெளிவந்த அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

குயில் இதழில் இடம் பெற்ற கவிதை, கட்டுரைகளை எழுதியவர் பெயர்களுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது. குயில் ஏட்டில் பாரதிதாசன் படைத்த கவிதைகள் எல்லாம் வெளிவந்த காலத்தில் எழுதப்பட்ட குறிப்புகளுடன் தரப்பட்டுள்ளன.

எந்த வகை பதிப்பு நெறிமுறை பின்பற்றப்பட்டது என்பதை முதலிலேயே குறிப்பிட்டு, வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. பாவேந்தர் பாரதிதாசன், பத்திரிகையியல் தொடர்பான ஆய்வாளர்கள் படிக்க வேண்டிய நுால்.

முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us