முகப்பு » தீபாவளி மலர் » லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2022

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2022

விலைரூ.200

ஆசிரியர் : கிரிஜா ராகவன்

வெளியீடு: லேடீஸ் ஸ்பெஷல்

பகுதி: தீபாவளி மலர்

ISBN எண்:

Rating

பிடித்தவை
காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளின் முழுப்பக்க வண்ணப்படங்களுடன் மலர்ந்துள்ளது லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர். ஆன்மிக தகவல்கள், சிறுகதைகள், சுற்றுச்சூழல் கட்டுரைகள், பயண அனுபவங்கள், நகைச்சுவை நாடகம், கவிதைகள் என பல்சுவையாக மிளிர்கிறது.

ராஜேஷ்குமார், தேவிபாலா, பா.ராகவன், இந்திரா பார்த்தசாரதி, அழகியசிங்கர் என தமிழில் முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகள் இடம் பெற்று உள்ளன. சில மொழிபெயர்ப்பு ஆக்கங்களும் படிக்க ஆர்வமூட்டுகின்றன. மாமுனிவர் அஷ்ட வக்கிரர் பற்றிய புராணச் செய்திகளும் இடம் பெற்று உள்ளன.

புனித தலங்கள் பற்றிய சிறப்பு செய்திகளும் உண்டு. புண்ணிய தீர்த்தங்களின் மகிமை, பயணங்களும் பதாகைகளும் என்ற பயணக் கட்டுரைகள் எல்லாம் மலரை பொலிவுறச் செய்கின்றன. பொருத்தமான படங்கள் உரிய இடங்களில் சேர்க்கப்பட்டு உள்ளன.
புதிய எழுத்தாளர்களின் ஆக்கங்களும் இடம் பெற்றுள்ளன. நல்லெண்ணத்தில் மலர்ந்துள்ள தீபாவளி மலர், வண்ணத்தோரணம் கட்டுகிறது.

– மலர்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us