முகப்பு » மாணவருக்காக » விகடன் இயர் புக் 2023

விகடன் இயர் புக் 2023

விலைரூ.350

ஆசிரியர் : பா.சீனிவாசன்

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்:

Rating

பிடித்தவை
போட்டித் தேர்வு எழுதுவோர், பள்ளி, கல்லுாரி மாணவ – மாணவியர், பொது அறிவை வளர்க்க விரும்புவோர் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால். அறிவை மெருகேற்றும் தகவல்களை கொண்டுள்ளது.

கடந்த ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்களை மையமாகக் கொண்ட கட்டுரைகள், உலக அளவில் உயர்ந்த விருது விபரம், உலகம், இந்தியா மற்றும் தமிழகத்தில் நடந்த நிகழ்வுகளை தொகுத்து தருகிறது. அரிய செய்திகளின் பெட்டகமாக உள்ளது.

துறை வாரியாக சிறப்பிடம் பெற்றவர்கள் எழுதிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தகவல்கள் முறையாக தொகுத்து தரப்பட்டுள்ளன. விரும்பியதை எளிதில் இனம் காணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தகவல் தேடும் பயணம் தொடருவோருக்கு கலங்கரை விளக்கமாக விளங்குகிறது. உலகில் ஓராண்டின் நிகழ்வுகளையும், மாற்றங்களையும் படம் பிடித்து பதிய வைக்கும் நுால்.

மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us