முகப்பு » வாழ்க்கை வரலாறு » நினைவோ ஒரு பறவை பாகம் -– -2

நினைவோ ஒரு பறவை பாகம் -– -2

விலைரூ.250

ஆசிரியர் : மனோபாலா

வெளியீடு: நக்கீரன் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
சினிமா நடிகரும், இயக்குனருமான மனோபாலா, திரையுலக வாழ்வில் சந்தித்த அனுபவங்களை தரும் நுால்.

நடிகர் விஜயகாந்துடன் நடிகையர் நடிக்கத் தயங்கிய தகவல்களை சுவாரசியமாக கூறியுள்ளார். எம்.ஜி.ஆர்., மற்றும் கருணாநிதி தரப்பு அழைப்புகளின் போது செய்வதறியாது தவித்து, சமாளித்ததையும் பதிவு செய்துள்ளார்.

எம்.ஜி.ஆர்., இறுதிச் சடங்கில் சந்தித்த நிகழ்வை, நேரில் பார்ப்பது போல பதிவு செய்துள்ளார். சிவாஜி கணேசன், சரோஜா தேவி நடிப்பில் படம் இயக்கிய அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.

நகைச்சுவை நடிகர்கள் வடிவேலு- – சிங்கமுத்து பிரச்னை, விவேக் உடனான நட்பு, சந்தானம், சூரி, யோகிபாபு குறித்தும் பேசி உள்ளார். சினிமா ஆர்வலர்கள் விரும்பும் நுால்.

– முகில் குமரன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us