சிறுவர்களுக்கான கார்ட்டூன் சேனல் கதாபாத்திரங்கள் போல் கற்பனை செய்து சற்று மாறுதலுடன் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். கதைகளை சித்தரிக்கும் படங்களும் உள்ளன. கதைகளையும், அவற்றுக்கான ஓவியங்களையும் இரண்டு சிறுமியர் உருவாக்கியுள்ளர்.
மழலை மாறாத மொழி நடையில் அமைந்துள்ள கதைகள் நேரடியாக தெளிவாக சொல்லப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் சம்பவங்களை மையக்கருத்தாக கொண்டுள்ளன. நகைச்சுவை தொனிக்கும் வகையில் அமைந்துள்ளன. கடைப்பிடிக்க வேண்டிய அறங்களை மிக மென்மையாக வலியுறுத்துகின்றன. கதைகளுக்கு இயைந்து வரும் வகையில் படங்கள் எளிமையாக வரையப்பட்டுள்ளன. சிறுவர்களின் படைப்பு ஆர்வத்தை பயிற்சியாக வெளிப்படுத்தும் நுால்.
– ராம்