ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்பை சாதாரணரும் புரிந்து கொள்ளும் வகையில் கேள்வி – பதில்களாக அமைந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். எளிய நடையில் அரிய மருத்துவக் குறிப்புகளை தருகிறது.நோய்களை தீர்க்கும் சுலபமான வழிமுறைகள் பற்றி கூறுகிறது. மிக எளிய வகையில், ‘கசப்பே மருந்து’ என்ற தலைப்பில் துவங்கி, 96 சிறிய கட்டுரைகளை உடையது. நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ, தக்க நல்ல ஆலோசனைகளை தருகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவதற்கான வழிமுறைகளையும், விபரத்தையும் தருகிறது. நோய்கள் பற்றி ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படையை விவரிக்கிறது. அன்றாடச் செயல்பாடுகளால் வாழ்வை ஆரோக்கியமாக மேன்மைப்படுத்தும் உத்திகளை காட்டும் நுால்.
– திசை