சங்கர் பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை-49. (பக்கம்: 120)
`அம்மா' என்று அன்போடும், பாசத்தோடும் மக்களால் அழைக்கப்படும் ஷ்ரீ மாதா அமிர்தானந்த மயி தேவி, கேரள மாநிலத்தில் அவதரித்து, இன்று உலகெங்கும் ஆன்மிகத்தையும் அன்பையும் உபதேசித்து வருகிறார். இன்றைய சூழ்நிலையில், வெறும் பக்தியும், ஞானமும் மட்டும் போதாது; பிறருக்கு உதவி செய்யும் மனமும் வேண்டும் என்று போதித்து வருகிறார்.
தான் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இறைவனின் மகிமையையும், கர்மயோகத்தின் சிறப்பையும் எடுத்துக்கூறும் வகையில், அவைகளை சிறு சிறு கதைகளாக கூறி, பாமரனுக்கு புரியும் வகையில் கூறி, பொது தொண்டை செய்து வருகிறார் அன்னை. இப்படி அன்னை கூறிய கதைகளை தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர்.