பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் நொடிக்கு நொடி செய்திகளை அள்ளி நம் மீது தெளித்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் அரசியல், பெரும்பாலும் ஊழல், கட்சித் தாவல், அமைச்சர்கள் மீதான வழக்குகள், வசை மொழிகள், சர்ச்சைகள், பிறகு, மத்திய அரசு,மாநில அரசு, நாடாளுமன்றக் கூட்டத்தொடர்,பாகிஸ்தான், தீவிரவாதம் இத்யாதிகள்.
நிறைய செய்திகள். ஆனால் நிறைவான செய்திகளா? நிச்சயம் இல்லை.
எனில், ஒரு செய்தி எப்போது நிறைவடைகிறது? அதைப்பற்றி நாம் சிந்திக்கத் தொடங்கும்போது; கேள்விகளை எழுப்பும்போது; விமரிசனங்களை முன்வைக்கும்போது; கவலைப்படும்போது; கோபப்படும்போது; அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து, விவாதிக்கும்போது.
இந்நூல் அதைத்தான் செய்கிறது. மேலோட்டமாக மட்டுமே நமக்கு இதுவரை அறிககமாகியுள்ள பல முக்கிய அரசியல் நிகழ்வுகளை ஆழமாகவும் விரிவாகவும் அலசி ஆராய்கிறார் அ.கி. வேங்கட சுப்ரமணியன்.