கொங்கு ஆய்வு மையம், 58/2, திரு.வி.க., நகர் சாலை, பாலக்காட்டுத் தோட்டம், ஈரோடு - 638 011. (பக்கம்:120)
தொல்லியல் துறை முன்னாள் தலைவர்; கல்வெட்டறிஞர்; முனைவர் செ.ராசு எழுதிய இந்நூல் கொங்கு நாடு, பூந்துறை நாடு, ஈரோடு, கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோயில், கல்வெட்டுக்கள், சேரர் செப்பேடு, திருக்கோயில் உற்சவங்கள், திருத்தலப் பதிகங்கள், திருப்பணி எனப் பத்து தலைப்புகளில் முழுமையான தல வரலாறு. "கி.பி.,922ம் ஆண்டிலேயே கொங்கு மக்கள் திருமணத்தின் போதும், நல்லடக்கத்தின் போதும் கோவிலுக்கு வரி கொடுக்கப்பட்டது (பக். 3) "தந்தை பெரியாரின் பெற்றோர் ஈ.த.வெங்கட
நாயக்கர், சின்னத்தாயம்மாள் ஆகியோரின் கோவில் திருப்பணிகளும், பெரியாரின் மூத்த சகோதரர் ஈ.வே.கிருஷ்ணசாமி நாயக்கர், 1926ம் ஆண்டில் அரங்கநாதர் பதிகம் பாடியதும்; தந்தை பெரியார் கோவில் நிர்வாகியாக இருந்து சிறப்பாக விழா நடத்தியதும் போன்ற அரிய செய்திகளை இந்நூலில் படித்து மகிழ முடிகிறது. தமிழகத்தில் இதுவரை மூன்று சேரர் செப்பேடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் இரண்டு ஈரோட்டுப் பகுதியில் கிடைத்தது. (பக்.87) இதுபோன்ற பல அகழாய்வுச் செய்திகளோடு ஈரோடு கல்லூரி அரங்கநாதர் திருக்கோயில் வரலாற்றை அற்புதமாய்ப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.