புதுக்கவிதை கோலோச்சும் காலத்தில் வாழ்கின்ற மரபுக் கவிஞர் இதனைப் படைத்திருக்கிறார். தெய்வ நம்பிக்கை, தேசப்பற்று, தமிழின் மீது அதிக ஆர்வம் கொண்ட ஆசிரியர், பல்வேறு தலைப்புகளில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். சமுதாயத்தின் குறைகளை கண்டு வேதனைப்பட்டாலும், இனி தீர்வு வரும் என்று கருதும் ஆசிரியரின் உணர்வு பாராட்டுதற்கு உரியது.
அதற்கு அடையாளமாக, ‘உழைப்பினால் கிடைக்கும் சோற்றை/ உண்கையில் எய்தும் இன்பம், அழைத்ததெவர் கோடி கோடி அளிப்பினும் கிடைப்பதுண்டா? என்ற கவிதையாகும்.மரபுக்கவிதை மட்டும் இன்றி புதுக்கவிதையும் இதில் காணப்பட்டாலும், காயம் பட்ட சமுதாயத்திற்கு நியாயம் உரைக்கும் கவிதைகளாக உள்ளன. அது இந்த நூலின் சிறப்பம்சமாகும்.