நூலின் முன்னுரை, குமரி மாவட்டத்தின் பூகோளம், வரலாறு, நாடார் மக்கள் சமூக வரலாறு, மொழியின் இயல்பு போன்றவற்றை விளக்குவதாகவும், ஆய்வு அடிப்படையை விளக்குவதாகவும் அமைந்துள்ளது. ‘கன்னியாகுமரி மாவட்ட மொழிச்சூழல்’ என்னும் தலைப்பில் அங்கு வழங்கும் தமிழ், மலையாளம், சில பழங்குடி மக்கள் பேசும் மொழிகள் போன்றவற்றின் மொழி இயல்புகள் விளக்கப்படுகின்றன.
‘கிறிஸ்தவ நாடார் வட்டார வழக்கின் இயல்புகள்’ என்னும் தலைப்பில், மொழி இயல்புகள், இரட்டை வழக்கு, வட்டார சமுதாயக் கிளைமொழிகள், கிழக்குப் பகுதி நாடார் வழக்கு, மேற்குப் பகுதி நாடார் வழக்கு, அவர்களது மலையாள வழக்கு போன்றவற்றை ஒப்பிட்டுக் காட்டிச் செல்கிறார் நூலாசிரியர்.
இந்த ஆய்வு, மொழி வழக்கின் எழுத்திலக்கணமாகிய ஒலியியல், சொல்லிலக்கணமாகிய உருபனியல், பின்தொடரியல் என, மொழியியலின் அடிப்படையில் அமைந்துள்ளது. நூலின் முதல் பகுதி வரலாற்று நிலையிலும், இரண்டாம் பகுதி இலக்கணம் – மொழியியல் சார்ந்தும் அமைந்துள்ளன.
இரண்டிலும் பொதுவாக விளங்குவது குமரி மாவட்ட மொழி தான்.
முனைவர் இராஜ. பன்னிருகை வடிவேலன்