முகப்பு » அரசியல் » காந்திஜியின் கனவு

காந்திஜியின் கனவு நனவாகட்டும்

விலைரூ.70

ஆசிரியர் : அ.பிச்சை

வெளியீடு: சபாநாயகர் செல்லப்பாண்டியன் அறக்கட்டளை

பகுதி: அரசியல்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘ஏழ்மை ஒழிக்கப்படவில்லை என்றால், தீண்டாமை முழுக்கத் துடைத்து எறியப்படவில்லை என்றால் நாம் சுதந்திரம் பெறுவதில் பொருளே இல்லை’ என, முழங்கியவர் காந்தி மகான். ‘என் அரிஜன சகோதரர்களை உள்ளே அனுமதிக்காத பூரி ஜகந்நாதர் கோவிலுக்குள், கஸ்தூரிபா, என்னை மீறி எப்படிப் போகலாம் என மனம் வருந்தியும், கடிந்தும் பேசியவர் அவர். தீண்டாமை ஒழிப்பை ஓர் இயக்கமாகவே நடத்தியவர். அவர் கண்ட கனவு நனவாக வேண்டும் என்னும் தம் விழைவை நூல் முழுவதும் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
‘ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக நிர்வாகம், சட்டசபை, நீதித்துறை, பத்திரிகை என்று சொல்கிறோம். இவற்றில் நேர்மைக்கும் திறமைக்கும் பெயர் போன நிர்வாக அமைப்பு இன்று வலுவிழந்து, செயலிழந்து நிற்கிறது. ‘அறிவு சார்ந்த விவாத அரங்குகளாக விளங்க வேண்டிய சட்டசபைகளும், நாடாளுமன்றமும் இன்று அர்த்தமற்ற பேச்சு, ஆரவாரம், அடிதடி, கூச்சல், குழப்பம் நிரம்பிய போர்க்களமாக  மாறிவிட்டது’ என்றும், தீண்டாமை ஒழிப்பை, ஓர் இயக்கமாக, காந்தியடிகள் நடத்திக் காட்டியது போல், ஊழல் ஒழிப்பையும், ஓர் இயக்கமாக நடத்த வேண்டும்’ என்றும் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆதிதிராவிட இனத்தை அரவணைத்த  பசும்பொன் தேவர் மீதும், சட்டமேதை அம்பேத்கர் மீதும் ஜாதியச் சாயம் பூசப்பட்டதே என வெதும்புவதும் கருத்து இதில் உள்ளது.
பல நாளிதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பாக விளங்கும் இந்நூல் திலகர் பெருமான், வள்ளல் பாண்டித்துரை, மன்னர் பாஸ்கர சேதுபதி, மருது பாண்டியர், காமராஜர், பசும்பொன் தேவர், முன்னாள் சட்டசபை சபாநாயகர் செல்லபாண்டியன், நல்லகண்ணு என்று பலரது வரலாற்றுச் சுவடுகளும் தரப்பட்டிருப்பது சிறப்பு.
வேளாண்மை, அரசியல், ஊழல் ஒழிப்பு, தண்டி யாத்திரை, தலைவருக்கு வேண்டிய தகுதிகள் என்னும் பல தலைப்புகளில் நூலாசிரியரின் அரிய சிந்தனைகளும் அணிகலச் சரங்களாக அணிவகுத்துள்ளன.
புலவர் சு.மதியழகன்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us