‘பலம் செய்வோம் தொழில் முனைவருக்கே!’ என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் வண்ணப் படங்களுடன் கட்டுரைகள் அமைந்துள்ளன. எங்கெங்கு வாய்ப்புகள் உள்ளன; தொழில் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்; முதலீட்டைப் புரட்டும் முறை; பணம் இல்லாவிட்டாலும் வியாபாரம் செய்யும் வாய்ப்பு உள்ளிட்ட அரிய கருத்துகள் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன.