ஆதிசங்கரர் துவக்கிய தலையாய மடமான சிருங்கேரி மடத்தின் சார்பில் வெளியாகும் அம்மன் தரிசன ஆன்மிக இதழின் படைப்பு இத்தீபாவளி மலர்.
முழுவதும் சங்கர தத்துவங்களைப் பேசும் தெய்வீக இதழாக மலர்ந்திருக்கிறது. நவரசங்களுக்கு விருந்து படைத்த காளிதாசன் கவித்துவம், ஜாதகத்தைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை என்ற மகாபீடாதிபதி அபிநவ வித்யா தீர்த்தர் கருத்தாழம், கணபதியின் கதைகள், தர்மம் எது, அதன் சூட்சுமம் என்ன என்று ஆன்மிக களஞ்சியமாக மலர் திகழ்கிறது. அட்டையில் கிருஷ்ணர் வண்ணப்படமும், யாரையும் துவேஷிக்காத வாழ்வு தேவை என்ற பாரதி தீர்த்தர் அருளாசி ஆகியவை இந்த மலரின் சிறப்புக்கு அடையாளமாகும்.