‘அன்பே ஆன்மிகம்’ என்ற நுால் வரிசையில் தொடர்ச்சியாக புத்தகங்கள் எழுதப்போகும் வரலொட்டி ரெங்கசாமி, அந்த வரிசையில் முதல் நுாலாக தாயென வந்தவளை தந்துள்ளார்.
இறைவன் அன்பு வடிவானவன்; ஆன்மிகம் என்பது பூஜை முறைகளில் மட்டுமல்ல, வித்தியாசம் பார்க்காமல் அனைவரிடமும் அன்பு காட்டுவதில் தான் இருக்கிறது.
பச்சை புடவைக்காரியான அன்னை மீனாட்சியின் அன்பை நினைத்து அழுவது தான், நான் தரும் ஆன்மிகத்தின் சாரம் என்று கோடிட்டு காட்டுகிறார் வரலொட்டி ரெங்கசாமி. நான்கு ஆன்மிக கதைகளும், நான்கு விதமாய் நமக்குள் அருள் மழை பொழிந்து, அன்பு என்னும் பாடம் போதிக்கிறது.