வீழ்ந்து விடாமல், துணிவை தக்க வைத்து வாழ்வது தான் மகத்தான சவால் என்பதை எளிமையாகக் கூறும் குறுநாவல்; எளிமையான நடையில் நகர்த்தியுள்ளார்.
ஒவ்வொரு கதாபாத்திரத்திலும், கோபம், குரூரம், வன்மம், இயலாமை, அன்பு தெரிகிறது. இவை, தினமும் சந்திக்கும் மனிதர்களை நினைவூட்டும். பிரச்னை, மரணத்தை விட மனிதன் பெரியவன் என்ற புரிதலுடன், மரண புதிருக்கு விடை தேடும் படைப்பு.
– டி.எஸ்.ராயன்