பஞ்சதந்திரம் என்பது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட கதைகள் செய்யுள்களின் தொகுப்பாகும். பஞ்சதந்திரக் கதைகள் பொழுது போக்குக் கதைகள் போலத் தோன்றினும் அரசியல் சூழ்ச்சி பற்றிய மூலக் கொள்கைகளைத் தெளிவுபடுத்தும். மித்திர பேதம், சுகிரில்லாப தந்திரம், சந்தி விக்ரகம், லப்தஹானி, அசம் பிரேக்ஷிய காரியத்துவம் என்ற பிரிவுகளில், 86 கதைகளைக் கொண்டு உள்ளன.
கதைகள் என்றால் ஆசைப்படாதவர்கள் இல்லை. சிறுவர்கள் மட்டுமன்றிப் பெரியவர்களுக்கும் ஆசை தான். தமிழில் தெனாலிராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என்று எத்தனை எத்தனையோ உண்டு.
சிறுவர்களும், பெரியவர்களும் படிக்கும் விதமாக குருவி, காக்கை, ஒட்டகம், மீன், சிங்கம் நரி, குரங்கு, எலி, முயல், குதிரை கதாபாத்திரங்களை கொண்டு, நிறைய புதுமையுடன் படைக்கப்பட்டு இருக்கிறது.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்