சமஸ்கிருத மொழியில் புலமை பெற்ற நீலகண்ட தீட்சிதரின் புகழ்பெற்ற படைப்புகள் பற்றிய ஆய்வு செய்திகளை உள்ளடக்கிய நுால். பாரம்பரியமாக நீலகண்ட தீட்சிதர் குடும்பம், நாயக்கர் மன்னர் அவையை அலங்கரித்துடன், சமஸ்கிருத மொழியில் இலக்கியம், இலக்கணம், தந்திர சாஸ்திரம், தத்துவ துறைகளில் ஆளுமையாக விளங்கியது.
சமஸ்கிருதத்தில், நீலகண்ட தீட்சிதர் இயற்றிய, கலிவிடம்பணம், சபா ரஞ்சனா சடகம் போன்ற பக்திப் பாடல் நுால்கள் புகழ் பெற்றவை. முகுந்த விலாச காவியம், கங்காவட்ரானா காவியம் மற்றும் சிவலீலாரண்வ காவியம் என்ற முப்பெரும் காவியத்தையும் இயற்றியுள்ளார்.
பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தை அடிப்படையாகக் கொண்ட வழிநுால் சிவ லீலாரண்வ காவியம். இதையும், ஒரு நாடக நுாலையும் எழுதியுள்ளார். பல நுால்கள் பிரசுரிக்காமல் கையெழுத்துப் பிரதியாக உள்ளன. இவற்றை எல்லாம் ஆராய்ந்து இந்த நுால் பதிவு செய்துள்ளது. சமஸ்கிருத மொழி ஆய்வாளர்களுக்கு உதவும்.
– புலவர் சு.மதியழகன்